Nov 19, 2026
Thisaigal NewsYouTube

தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்

பேரா, தம்புனில் இன்று அதிகாலை போலீஸ் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த 39 வயது ஆடவர், ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகிக்கப்படுகிறார்.

அவருக்கு கொள்ளை, போதைப்பொருள் மற்றும் வீடு உடைத்துத் திருடுதல் உள்ளிட்ட 17 குற்றப் பதிவுகள் இருப்பதாக புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஓராண்டில் பேராக், மலாக்கா, பினாங்கு மற்றும் சிலாங்கூரில் நடைபெற்ற சுமார் 22 வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பவத்தின்போது போலீஸ் துறையினரை நோக்கி அந்த ஆடவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதற்குப் பதிலடி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள், கத்திகள் மற்றும் ஷாபு போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்