முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் கோலாலம்பூர் தாமான் டூத்தா இல்லம், சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து குடியிருப்பு மண்டலமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு, தற்போதைய நிலவரப்படி அந்த இல்லம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குடியிருப்பு மண்டல வகைப்பாட்டிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், அந்த இல்லம் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டிருப்பது புதிய நிலை என்பதால், மண்டல வகைப்பாட்டில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து பின்னர் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவை உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, நஜிப் ரசாக்கின் இல்லம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் குடியிருப்பு மண்டல வகைப்பாடு இன்னும் மாற்றப்படவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டது.








