Nov 19, 2026
Thisaigal NewsYouTube

ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டை, மலேசியாவுக்கான ஜோர்டான் தூதர் டாக்டர் இஸ்மாயில் மடால்லா சுலிமான் மாய்தா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அண்மையில் மறைந்த துன் டாக்டர் ஹஸ்மா முஹமட் அலியின் மறைவுக்கு ஜோர்டான் தூதர் இரங்கல் தெரிவித்தார்.

மேலும், ஜோர்டானில் அரசியல் அறிவியல் பயின்றபோது துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவமும் நிர்வாக அணுகுமுறையும் தமக்கு முன்மாதிரியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஜோர்டான் மன்னர் ராஜா அப்துல்லா II இப்ன் அல்-ஹுசேன் மலேசியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அந்தப் பயணத்தின்போது கல்வித்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, இரு நாடுகளுக்கிடையிலான மாணவர் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன.

மேலும், ஜோர்டான் தூதர், மலேசியா – ஜோர்டான் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என துன் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்

தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்

தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்