முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கு, தனிநபர்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பிணையாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவிற்குத் தலைமையேற்ற டத்தோ வி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட யாரும், சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்ற ஒரு தெளிவான செய்தியை SRC International வழக்கு புகட்டியுள்ளது என்று டத்தோ சிதம்பரம் குறிப்பிட்டார்.
SRC International வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நஜீப் செய்து கொண்ட சீராய்வு மனு, கூட்டரசு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ சிதம்பரம் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைப் புரிகின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. அத்தகைய குற்றவாளிகளைச், சட்டம் விரட்டிச் சென்று தண்டிக்கும் என்பதற்கு SRC International வழக்கு ஒரு சான்றாகும் என்று டத்தோ சிதம்பரம் நினைவுறுத்தினார்.

தற்போதைய செய்திகள்
SRC International வழக்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். டத்தோ வி.சிதம்பரம் திட்டவட்டம்
Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


