Sep 30, 2026
Thisaigal NewsYouTube
லோரியை முந்திய போது கட்டுப்பாட்டை இழந்த ஹைலக்ஸ் விபத்து -  5 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

லோரியை முந்திய போது கட்டுப்பாட்டை இழந்த ஹைலக்ஸ் விபத்து - 5 பேர் காயம்

Share:

மாரான், கிழக்குக் கடற்கரை விரைவுச் சாலையில், லோரியை முந்திச் செல்ல முயன்ற போது டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், நான்கு சீனப் பிரஜைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் 155-வது கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மலேசியர் ஒருவர் ஓட்டிச் சென்ற ஹைலக்ஸ், லோரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக சறுக்கியது. பின்னர் பலமுறை சுழன்று சாலைத் தடுப்பில் மோதியது.

இந்நிலையில், காயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் மாரான் கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பு அலுவலகத்தில் இருந்து தெமர்லோவின் லன்சாங் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News