Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக உயர் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக உயர் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்து விபரங்களை அறிவிக்கத் தவறியதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது ஷாரில் அபு பாக்கார் என்ற அந்த உயர் போலீஸ் அதிகாரி, நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் விபச்சாரம், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் துடைத்தொழிப்புப் பிரிவில் பணியாற்றும் அந்த அதிகாரி, தனது சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிக்குள் அறிவிக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்குச் சொந்தமான 716.8 கிராம் டிஜிட்டல் தங்கம், 80 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள Crypto நாணயங்கள், 39 ஆயிரத்து 168 ரிங்கிட் முதலீடு, அமானா சஹாம் பூமிபுத்ராவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை வாங்கியது, ஜோகூர் பாருவில் உள்ள ஒரு சொத்துடைமைக்கு 68 ஆயிரம் ரிங்கிட் வீட்டுக் கடனைச் செலுத்தியது முதலியவை குறித்து கடந்த ஜுன் 28 ஆம் தேதி எஸ்பிஆர்எம் விசாரணையின் போது அந்த அதிகாரி விளக்கத் தவறி விட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

துணை சுப்ரிண்டெண்டன் பதவி வகிக்கும் அந்த அதிகாரி, ஷாரிகாட் சஹாரா செர்விசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பிலும் அந்த அதிகாரி விளக்கம் அளிக்கத் தவறிவிட்டார் என்று மற்றொரு குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்