கோலாலம்பூர், டிசம்பர்.03-
மக்களுக்கு 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 22 மில்லியன் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியப் பகுதியில் அமல்படுத்தவிருக்கிறது.
மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளுக்கு ஆயத்தமாகும் வகையில் இந்த 100 ரிங்கிட் உதவித் திட்டத்தை இரண்டாவது முறையாக மடானி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.
மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேர்வு செய்யப்பட்ட பேரங்காடிகளில் வாங்கிக் கொள்வதற்கு சாரா 100 ரிங்கிட் உதவித் திட்டம் வகை செய்கிறது.








