Jun 12, 2026
Thisaigal NewsYouTube
1 லட்சத்து 69,000-க்கும் மேற்பட்ட எஸ்பிஎம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

1 லட்சத்து 69,000-க்கும் மேற்பட்ட எஸ்பிஎம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Share:

2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்த் 803 பேருக்கு யுபியுஆன்லைன் வழியாகப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 91 ஆயிரத்து 357 பேருக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களிலும், 60 ஆயிரத்து 947 பேருக்குப் பாலிடெக்னிக்குகளிலும், ஏனையோருக்குச் சமூகக் கல்லூரிகள் மற்றும் மாரா கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் கிடைத்துள்ளன என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதி அடிப்படையிலான மெரிட் முறையில் இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், ஓராங் அஸ்லி மற்றும் பி40 பிரிவினருக்குச் சிறப்புப் பாதைகள் மூலமும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இடங்கள் கிடைக்காத மாணவர்கள், இன்று முதல் வரும் மே 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை யுபியுஆன்லைன் தளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

Related News