பிற அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட தற்போதைய நடப்பு விவகாரங்கள் குறித்து பாஸ் கட்சியின் தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ கருத்து தெரிவிக்கக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தடை விதித்துள்ளார்.
பாஸ் தலைமைத்துவத்தின் 'சிறப்பு அனுமதி' இன்றி யாரும் அறிக்கை வெளியிடக் கூடாது என்றும், இந்த விவகாரத்தைக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் புத்திசாலித்தனமாக கையாளுவார் என்பதால் அனைவரும் அமைதி காக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெர்சத்து கட்சியுடனான கூட்டணியை பாஸ் மறுபரிசீலனை செய்து வருவதாக ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெர்சத்து கட்சியின் திருப்தியற்ற சில செயல்பாடுகள் காரணமாக, அடுத்த பொதுத்தேர்தலில் அக்கட்சியின்றி தனித்து போட்டியிடுவது குறித்து பாஸ் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.








