கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் சந்திப்பில் ஆபத்தாக வாகனத்தை நிறுத்தி, பட்டாசு கொளுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 7 பேருக்கு நீதிமன்றம் 50 ரிங்கிட் முதல் 4,500 ரிங்கிட் வரை அபராதம் விதித்துள்ளது.
கடந்த மே 18 அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது அஷார் என்ற வாகன ஓட்டிக்கு 4,500 ரிங்கிட் அபராதமும், பொதுமக்களுக்கு இடையூறு செய்த 5 இளைஞர்களுக்கு தலா 400 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அங்கு பட்டாசு கொளுத்திய முகமது ஹாஸிக் என்பவருக்கு 50 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








