Jun 6, 2026
Thisaigal NewsYouTube
டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்
தற்போதைய செய்திகள்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

Share:

அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட டாமன்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் 98 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சிஐடி இயக்நனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

டோனி புவாவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

மலேசியாவில் ஆட்சியாளர்களின் அதிகாரம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதே; ஆட்சியாளர்களின் கட்டளைகள் மக்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களையும் கட்டுப்படுத்தாது" என டோனி புவா பதிவிட்டிருந்தார்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா ருக்குன் நெகாராவின் முக்கியத்துவத்தை உணருமாறு சில அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தியதை அடுத்தே டோனி புவா இந்த விவாதத்திற்குரிய கருத்தை வெளியிட்டார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத... | Thisaigal News