Jun 6, 2026
Thisaigal NewsYouTube
நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

Share:

சிங்கப்பூரில் உள்ள சுமார் 544 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை பயன்படுத்தத் தடை விதிக்க கோரி, முன்னாள் நிதியமைச்சரான காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுடினின் மனைவி நைமா காலித் மற்றும் மேலும் எட்டு பேருக்கு எதிராக, அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத வருமானச் செயல்கள் தடுப்புச் சட்டம் 2001 (AMLA) பிரிவு 53 இன் கீழ் தேவையான நிபந்தனைகளை அரசுத் தரப்பு நிரூபிக்க தவறியதாக நீதிபதி ஆரிஃப் எம்ரான் அரிஃபின் தெரிவித்தார்.

மேலும், சட்டப் பிரிவு 53 இன் கீழ் தேவையான சோதனைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025 -ம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி, நைமா, அவரது மகன் அமீர் ஜைனுடின், மேலும் இரண்டு தனிநபர்கள், ஐந்து நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் வெளிநாட்டு சொத்துகளை நிர்வகிப்பதைத் தடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஒருதரப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

குறிப்பாக சிங்கப்பூரிலுள்ள பல வங்கி கணக்குகளில் 21 மில்லியன் Pounds மலேசிய மதிப்பில் சுமார் 121 மில்லியன் ரிங்கிட் மற்றும் 99 மில்லியன் அமெரிக்க டாலர்கள், மலேசிய மதிப்பில் சுமார் 423 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதிகள் இருப்பதாக எஸ்பிஆர்எம் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு