Jun 12, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

Share:

கெந்திங்கிலிருந்து கோம்பாக் நோக்கி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில், மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யுஐஏ கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் காரில் 4 மாணவர்கள் இருந்ததாகவும், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோரியின் பின்புறத்தில் மோதியதாகவும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் முகமது நாசிர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில், கார் ஓட்டுநர் மற்றும் இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிர் தப்பிய மற்றொருவர் கடுமையாகக் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 4(1)-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News