May 22, 2026
Thisaigal NewsYouTube
2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்
தற்போதைய செய்திகள்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

Share:

ஜோகூர் ஸ்ரீ ஆலாம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், தொடக்கப் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணை நடைபெறும் வரை அவர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜோகூர் மாநில கல்வித்துறையான ஜேபிஎன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யப்படுவதற்காக சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பாலியல் நடத்தைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும், தவறு செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

12 வயது மாணவியான அவர், அதே பள்ளியில் பணியாற்றும் ஆண் ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அம்மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்ததையடுத்து, நேற்று இரவு 10.30 மணியளவில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சொஹைமி இஷாக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News