Jun 16, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது
தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

Share:

இணைய பாதுகாப்புச் சட்டமான ஒன்சா 2025-இன் கீழ், குழந்தைகளுக்கான இணைய பாதுகாப்பை வலுப்படுத்தவும், தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தவும் இரண்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அறிவித்துள்ளது.

அதன்படி, சிறார் பாதுகாப்பு நெறிமுறை சிபிசி மற்றும் அபாயக் குறைப்பு நெறிமுறை ஆர்எம்சி ஆகியவை வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிபிசி மற்றும் ஆர்எம்சி ஆகியவை, மலேசியாவின் இணைய பாதுகாப்பு அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகளாகும்.

மேலும், ஒன்சா சட்டத்தின் கீழ் முக்கிய பொறுப்புகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையானது, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை உறுதி செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று எம்சிஎம்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News