Oct 5, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் ஆயுதப்படைத் தளபதி ஹஷிம் அலி காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் ஆயுதப்படைத் தளபதி ஹஷிம் அலி காலமானார்

கோலாலம்பூர், அக்டோபர்.01-

முன்னாள் ஆயுதப்படைத் தளபதியும், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா அலியின் சகோதரருமான துன் டாக்டர் முகமட் ஹஷிம் அலி காலமானார். அவருக்கு வயது 90.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர், கிளேனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஹஷிம் அலி, இன்று முற்பகல் 11.50 மணியளவில் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹஷிம் அலியின் நல்லுடன், முழு இராணுவ மரியாதையுடன் கோலாலம்பூர், சுங்கை பீசி, ரௌடாதுல் சகினா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி, தனது ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு மலேசிய அ ரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கும் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தாய்லாந்து, Hat Yai –யில் நடைபெற்ற வரலாற்றுப்பூர்வமான அமைதி ஒப்பந்தத்தில் மலேசியாவின் ஆயுதப்படை தளபதி என்ற முறையில் கையெழுத்திட்ட பெருமை மறைந்த ஹஷிம் அலியையே சாரும்.

1998 ஆம் ஆண்டு மலேசியா முதல் முறையாக அனைத்துலக அளவில் ஏற்று நடத்திய கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் துணை புரிந்த சுகோம் நைய்ண்டி ஏட் பெர்ஹாட்டின் தலைவராகவும் ஹஷிம் அலி சீரிய பங்களிப்பை வழங்கினார் என்பது வரலாறாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →