Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கா - ஈரான் மோதல்: அமைதி மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்கா - ஈரான் மோதல்: அமைதி மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள ஆயுத மோதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண உடனடியாக ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர்ச் சூழல் தீவிரமடைவது உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த மோதலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்கள், குறிப்பாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறித்து சுட்டிக் காட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இக்கட்டான இந்தச் சூழலில் மலேசியா எப்போதும் சர்வதேச சட்டங்கள் மற்றும் அமைதி வழியிலான தீர்வுகளையே ஆதரிக்கும் எனத் தெரிவித்தார். மேலும், இந்தப் பதற்றத்தைக் குறைக்க அனைத்துலக நாடுகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு