Jul 15, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?
தற்போதைய செய்திகள்

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

Share:

ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், N48 ஸ்கூடாய் தொகுதியின் ஒட்டுமொத்த கவனமும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜசெக வேட்பாளர் வழக்கறிஞர் கார்த்தியாயினி ஜெயபாலன் மீது திரும்பியுள்ளது.

டாக்சி ஓட்டுநரின் மகளாக, தமிழ்ப்பள்ளியில் படித்து, இன்று மலாயா பல்கலைக்கழகச் சட்டப் பட்டதாரியாக நிமிர்ந்து நிற்கும் இவர், சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையின் அடையாளம். ஜோகூர் தேர்தல் வரலாற்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த களம் இறங்கியுள்ள இரு தமிழர்களில் இவரும் ஒருவர். மண்ணின் மகளாக, தொகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து உணர்ந்த கார்த்தியாயினி, 'திசைகள்' ஊடகத்திற்கு அளித்த அனல் பறக்கும் நேர்காணல் இதோ:

வெற்று அரசியல் வாக்குறுதிகளைத் தராமல், தன் சொந்தக் குடும்பம் அனுபவித்த துயரத்தின் வழியே தொகுதி மக்களின் வெள்ளப் பேரிடர் வலியை கார்த்தியாயினி முன்வைத்த விதம் அவரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது

ஆறுகளை ஆழப்படுத்துவது, முதியவர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளின் லிஃப்ட் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என அவர் முன்வைக்கும் திட்டங்கள் அனைத்தும் ஒரு படித்த சட்ட நிபுணரின் ஆளுமையைப் பிரதிபலிக்கின்றன. ஜோகூர் சட்டமன்றத்தில் நமது சமூகத்தின் குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்றால், முழுத் தகுதியுடைய கார்த்தியாயினி போன்ற படித்த இளையோர்களின் பங்களிப்பு இன்று காலத்தின் கட்டாயம். ஜோகூர் தமிழ்ப் பிரதிநிதிகளின் வெற்றியை உறுதி செய்வது எதிர்காலச் சமூக நலனுக்கான முக்கிய நகர்வாகும். தகுதியான வேட்பாளர்களை அங்கீகரிப்பதே வாக்காளர்களின் கடமை என்பதை இந்த நேர்காணல் தெளிவுபடுத்துகிறது.

Related News