Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கட்டணமில்லா பயணத்தை வழங்குமாறு அரசாங்கத்திற்கு ஜசெக தேசியத் துணைத் தலைவர் ஙா கோர் மிங் பரிந்துரைத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஜோகூர் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக, ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்தத் டோல் கட்டண விலக்கை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் உராட்சித்துறை அமைச்சருமான இவர், வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இக்கோரிக்கையைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும் மலேசியர்கள் அனைவரும் குறிப்பாக சீன சமூகத்தினர் ஒன்றுபட்டு, ஜூலை 11 அன்று நடைபெறும் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கத் திரள வேண்டும் என்றும் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க... | Thisaigal News