Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சி மலாய்க்காரர்களின் மனங்களை வென்றெடுக்கும்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சி மலாய்க்காரர்களின் மனங்களை வென்றெடுக்கும்

Share:

பினாங்கு மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணி மலாய்க்காரர்களின் பெருவாரியான ஆதரவை பெறும் என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் எளிதாக வெற்றிப்பெறும் என்று அக்கூட்டணி கூறுவது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று ராமசாமி குறிப்பிட்டார்.

அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், மலாய்க்காரர்களின் ஆதரவு பெருகிவருகிறது என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் ராமசாமி விளக்கினார்.

Related News