Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி
தற்போதைய செய்திகள்

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.19-

நாட்டின் புதிய கல்வி முறையை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் தேசியக் கல்விக் கொள்கைக்கு இணங்க இருக்க வேண்டும் என்றும், மலாய் மொழியை அதன் முதன்மை அங்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தின் 15-வது கூட்டத் தொடரின் ஐந்தாவது தவணையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி முறை, தேசக் கட்டமைப்பிற்கும், அடையாளத்திற்கும் அடிப்படையானது. எனவே, கல்வி முறையில் மலாய் மொழியே முதன்மை மொழியாக இருக்க வேண்டும். ஏனெனில் அதுவே தேசிய மொழியாகும்.

வேறு ஏதேனும் கல்வி முறையை அங்கீகரிக்கக் கோரும் எந்தவொரு முன்மொழிவும், மலாய் மொழியையும் மலேசிய வரலாற்றையும் கண்டிப்பாக ஏற்க வேண்டும்.

"மலேசியாவில் இருந்து கொண்டு மலாய் மொழியை ஏற்க மறுப்பவர்கள், இந்த நாட்டில் வசிக்காமல் இருப்பதே நல்லது" என்று மாமன்னர் தனது உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

மலாயா, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை ஒன்றிணைத்த 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தமான MA63 அடிப்படைத் தத்துவங்களுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News