கிள்ளான், பண்டாமாரான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரை ஓட்டிச் சென்ற 31 வயது நபர், காவற்படையினரின் உத்தரவை மீறி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தப்பியோடிய நிலையில், ரோந்து வாகனத்தை மோதிய பின்னர் பிடிபட்டார். பிடிபட்ட அந்த நபரிடம் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் ஏற்கனவே பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும், காவற்படையால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்த தாக கிள்ளான் செலாத்தான் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் லிம் ஜித் ஹுய் தெரிவித்தார். தப்பியோடும் முயற்சியில் மேலும் இரு பொதுமக்களின் வாகனங்களையும் சேதப்படுத்திய அந்த நபரை, காவற்படையினர் மார்ச் 16-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


