கெமாமான் கம்போங் கோங் லிமாவ் பகுதியில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கும் பட்டாசு விற்பனை செய்யும் கூடாரமும் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு விரைந்த 22 தீயணைப்பு வீரர்கள், பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையிலும் சுமார் 19 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அஃது அருகில் பரவாமல் தடுத்த தாக சுக்காய், தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது ஹனிப் செ காலித் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம், நேர்ந்துள்ள இழப்பு மதிப்பு ஆகியன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முகமது ஹனிப் தெரிவித்துள்ளார்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


