Nov 2, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி பண்டிகை: டாமான்சாரா தொகுதியில் 800 குடும்பங்களுக்கு உணவுப் பைகள் விநியோகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி பண்டிகை: டாமான்சாரா தொகுதியில் 800 குடும்பங்களுக்கு உணவுப் பைகள் விநியோகம்

தீபாவளிப் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், 99 ஸ்பீட்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து நான்காவது ஆண்டாக தீபாவளி உணவுப் பைகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் பெட்டாலிங், கோம்பாக், சுங்கை பூலோ மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்காக மொத்தம் 800 உணவுப் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பைகள் மூலம் பயனாளிகளின் அன்றாடப் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடியும் என்றும், இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை அவர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முன்னெடுக்கப்படுவதற்கு 99 ஸ்பீட்மார்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்பு முக்கியப் பங்காற்றுவதாகவும், அனைவரும் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் இலக்கவியல் அமைச்சரும், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

வணிக வளாகத்தில் 2 குழந்தைகள் மீது தாக்குதல் – மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வணிக வளாகத்தில் 2 குழந்தைகள் மீது தாக்குதல் – மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

குவாந்தான் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

குவாந்தான் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

சிறு வணிகர்கள் உட்பட சுமார் 3 லட்சம் தொழில்முனைவோருக்கு 10.7 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி

சிறு வணிகர்கள் உட்பட சுமார் 3 லட்சம் தொழில்முனைவோருக்கு 10.7 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி