Nov 2, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

ஜோகூர் மாநிலத்தில் இந்தியச் சமூகத்தினர் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழு தொடர்ந்து செயல்படும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆலயங்கள் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கேமேலா சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான கே. ரவீன் குமார் தலைமையில் இந்த சிறப்புப் பணிகுழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நடைபெறும் ஜுவாலான் காசே ஜோகூர் விற்பனைத் திட்டத்திற்காக மில்லியன் கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதுடன், தேவைப்படுவோருக்கு உணவுப் பொருள் கூடைகளும் வழங்கப்பட உள்ளதாக ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய கட்டத்தில் நிதியுதவி கிடைக்காமல் விடுபட்டவர்கள் பின்னர் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், அவர்களுக்கும் அண்மையில் பத்துவான் காசே ஜோகூர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு தாமான் தம்போய் இண்டா பகுதியில் நடைபெற்ற பங்சா ஜோகூர் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ஓன் ஹாஃபிஸ் காஸி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →