பஹாங் மாநிலத்தில் உள்ள ஆறு ஒன்றில், அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜாலான் பெசார் அருகே உள்ள குவாந்தான் ஆற்றில் அப்பகுதியினர் அப்பெண்ணின் சடலத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.
உயிரிழந்த பெண் 30 வயதுடையவராக இருக்கலாம் என்றும், அவர் சிவப்பு நிறச் சட்டையும், வெள்ளை நிறக் காற்சட்டையும் அணிந்திருந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பெண்ணின் நெற்றிப் பகுதியில் ரத்தக் காயத்துடன் கூடிய கீறல்கள் காணப்பட்டதாகவும், இருப்பினும் குற்றச்செயல் நடைபெற்றதைக் குறிக்கும் வகையில் வேறு எந்தக் காயங்களும் உடலில் தென்படவில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சடலத்தின் அடையாளம் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








