Nov 2, 2026
Thisaigal NewsYouTube

டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டேசா துன் ரஸாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

கோலாலம்பூரின் சுங்கை பீசி, டேசா துன் ரஸாக் பகுதியில் கடை அமைப்பதற்கான இடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதைத் தொடர்ந்து, 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் டேசா துன் ரஸாக் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நிகழ்ந்தாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஈடுபட்டுள்ளதாகவும், கடை அமைப்பதற்கான இடம் தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலே மோதலுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திலேயே 16 முதல் 44 வயதிற்க்குட்பட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் முக்கியச் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பதிவுகளைக் கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், மோதலின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

வணிக வளாகத்தில் 2 குழந்தைகள் மீது தாக்குதல் – மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வணிக வளாகத்தில் 2 குழந்தைகள் மீது தாக்குதல் – மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

ஜோகூர் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்புப் பணிக்குழு - மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவிப்பு

குவாந்தான் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

குவாந்தான் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

தீபாவளி பண்டிகை: டாமான்சாரா தொகுதியில் 800 குடும்பங்களுக்கு உணவுப் பைகள் விநியோகம்

தீபாவளி பண்டிகை: டாமான்சாரா தொகுதியில் 800 குடும்பங்களுக்கு உணவுப் பைகள் விநியோகம்

சிறு வணிகர்கள் உட்பட சுமார் 3 லட்சம் தொழில்முனைவோருக்கு 10.7 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி

சிறு வணிகர்கள் உட்பட சுமார் 3 லட்சம் தொழில்முனைவோருக்கு 10.7 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி