May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவை வழங்கிய 6 மக்கள் பிரதிநிதிகளுக்கு, பெர்சத்து கட்சி அடுத்த வாரம் கடிதம் அனுப்பும்
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவை வழங்கிய 6 மக்கள் பிரதிநிதிகளுக்கு, பெர்சத்து கட்சி அடுத்த வாரம் கடிதம் அனுப்பும்

Share:

சிலாங்கூர், மே 09-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிக்கு ஆதரவளித்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி-க்கு ஆதரவளித்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியில் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டனர்.

அது தொடர்பான கடிதம், அடுத்த வாரம் அவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதின் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சியில் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தை, சங்கப் பதிவகம் அண்மையில் அங்கீகரித்திருந்ததை அடுத்து, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில், அவரவர் உறுப்பினர் தகுதியை இழாந்துவிட்டதாக, அக்கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 7 மக்கள் பிரதிநிதிகளும் இடைத்தேர்தலை நடத்தப்படுவதற்கு வழிவிடும் வகையில், தங்களது தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என ஹம்சா ஜைனுதின் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பெர்சாத்து கட்சியின் அம்முடிவுக்கு எதிராக, அந்த எழுவரும் நீதிமன்றத்திற்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், அது வழக்கமான ஒன்று எனவும் கூறினார்.

Related News