எதிர்வரும் டிசம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. எனவே, பொது மக்கள் இந்த விழாவுக்கு வருகையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் மடானி அரசாங்கத்தின் இலக்கு குறித்து பொது விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன் , அரசாங்கத்தின் சாதனைகள், அடைவுநிலைகள், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கையை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் அமைச்சுகள், அரசாங்க சார்புடைய நிறுவனங்கள், பொது அமைப்புகள் ஆகியோருடன் தனியார் துறையினரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் அதன் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் கலந்து கொள்வார் என திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.








