Nov 18, 2025
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்பு மற்றும் இணைய பாதுகாப்பில் இந்தியா, ஈரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த மலேசியா திட்டம்
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்பு மற்றும் இணைய பாதுகாப்பில் இந்தியா, ஈரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த மலேசியா திட்டம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.18-

தொலைத் தொடர்பு துறையில், குறிப்பாக இணையப் பாதுகாப்பில் இந்தியா மற்றும் ஈரானுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை மலேசியா ஆராய்ந்து வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகத் தொலைத் தொடர்பு மேம்பாட்டு மாநாடு 2025-இல் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபாமி ஃபாட்சீல், இந்தியா மற்றும் ஈரான் நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர்களைச் சந்தித்து தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்புத்துறையில் இந்தியாவும், ஈரானும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களுடன் இணைந்து செயல்படும் போது நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இணைய மோசடிகளை அவர்கள் கையாளும் விதமும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அவர்களின் அனுபவமும் மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

அதே வேளையில், தொலைத் தொடர்புத்துறையில் ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளதாகக் குறிப்பிட்ட ஃபாமி ஃபாட்சீல், அமைச்சரைவில் அது பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றிய கவுன்சில் தேர்தலில் மலேசியா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கம் இருப்பதை இருநாட்டு அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

Related News