Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஜெயாவில் தவறி விழுந்து இருவர் மரணம், ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

சுபாங் ஜெயாவில் தவறி விழுந்து இருவர் மரணம், ஒருவர் காயம்

Share:

சுபாங் ஜெயாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், ​​ஸ்கைலிஃப்ட்ட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார்.

பொதுமக்களில் ஒருவர் அது குறித்து தகவல் கொடுத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர், அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் மூன்று ஆடவர்கள் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது. மற்றொருவர் தலை மற்றும் மார்பில் காயமடைந்ததால் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக வான் அஸ்லான் கூறினார்.

38 முதல் 46 வயதுக்குட்பட்ட அம்மூவரும் ஸ்கைலிஃப்ட்ட்டைப் பயன்படுத்தி ஐந்தாவது மாடியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கனத்த மழை பெய்து கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எந்தக் குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை. அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து ஆரூடங்கள் பரப்ப வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார். அதே வேளை விவரம் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு