Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாத பேருந்துகளுக்கு எதிரான அமலாக்கம் தீவிரப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாத பேருந்துகளுக்கு எதிரான அமலாக்கம் தீவிரப்படுத்தப்படும்

Share:

கட்டாயமாக இருக்க வேண்டிய வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இன்னும் பொருத்தாத விரைவு மற்றும் சுற்றுலாப் பேருந்துகளுக்கு எதிரான நடவடிக்கை நாடு தழுவிய நிலையில் தீவிரப்படுத்தப்படும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக, குறிப்பாக விரைவில் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா பண்டிகைக் காலத்தில் அமலாக்கம் கடுமையாக்கப்படும் என சாலை போக்குவரத்துறைத் தலைமை இயக்குனர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த முதல் கட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, பேருந்து நடத்துநர்கள் SLD முறையைப் பொருத்தி சான்றளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அமலாக்கம் தொடங்கும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பாக சுற்றுலாப் பேருந்துச் சேவை நடத்துனர்கள் விதிமுறைகளுக்கு இணங்காமல் இருப்பது கடுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் விதிமுறையைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கும் பேருந்துச் சேவை நடத்துநர்கள் மீது மேலும் அதிகமான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என ஏடி எச்சரித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு