Nov 19, 2026
Thisaigal NewsYouTube

இசிஆர்எல் ரயில் சேவை தொடக்க விழாவுக்கு போக்குவரத்து அமைச்சர் அவசியமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இசிஆர்எல் ரயில் சேவை தொடக்க விழாவுக்கு போக்குவரத்து அமைச்சர் அவசியமில்லை

கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான ரயில் இணைப்புத் திட்டமான இசிஆர்எல் முதற்கட்டப் பயணிகள் சேவை, வரும் டிசம்பர் 12ஆம் தேதி திட்டமிட்டபடி தொடங்கப்படும் எனத் துணைப் போக்குவரத்து அமைச்சர் ஹாபிட் ஹாபிபோல்லா தெரிவித்துள்ளார்.

இவ்விழாவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சராக இருந்த அந்தோணி லோக், பதவி விலகியுள்ள நிலையில், புதிய ரயில் சேவையைத் தொடங்க அமைச்சரின் ஒப்புதல் அவசியமா என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஹாபிட் ஹாபிபோல்லா, அடுத்த ஒரு வாரத்திற்குள் புதிய போக்குவரத்து அமைச்சர் நியமிக்கப்படலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

523 கிலோமீட்டர் நீளமுள்ள முதற்கட்ட இசிஆர்எல் ரயில் பாதை, கிளந்தான் மாநிலம் கோத்தா பாரு முதல் சிலாங்கூர் மாநிலம் கோம்பாக் வரை 16 நிலையங்களைக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வாட்ஸ்அப் குழுச் செய்தியால் மாணவர் மீது மூவர் தாக்குதல்

வாட்ஸ்அப் குழுச் செய்தியால் மாணவர் மீது மூவர் தாக்குதல்

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்