Nov 19, 2026
Thisaigal NewsYouTube

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பேராக் மாநிலம் உலு கிந்தா பகுதியில் இன்று அதிகாலை குடியிருப்புப் பகுதியில் போலீசாருக்கும், சந்தேக நபருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தை பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாநில போலீஸ் தலைமையகத்தில் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பிற்கு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள. ஊடகவியலாளர்கள் உட்பட எவருக்கும் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் பலத்த வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும், அவற்றைப் பட்டாசுச் சத்தம் என முதலில் தவறாக நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்