சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்களில் இன்று வியாழக்கிழமை, தேசிய அளவிலான அவசர எச்சரிக்கை அமைப்புச் சோதனை நடைபெறும் எனப் பரவி வரும் தகவல் தவறானது என்று மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
இன்று திட்டமிடப்பட்டுள்ள அந்த சோதனையானது, தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் தயார் நிலை மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்படும், பிரத்யேக தனிப்பட்ட தொழில்நுட்பச் சோதனை மட்டுமே என்றும் எம்சிஎம்சி விளக்கமளித்துள்ளது.
இது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சோதனை அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும், சமீபத்திய அறிவிப்புகளுக்கு எம்சிஎம்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.








