Nov 18, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சிலாங்கூரில் ஒன்பது நிவாரண மையங்களில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,392 பேர் தங்கியுள்ளனர். குறிப்பாக, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 17 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று இரவு பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாங்கூரின் சிப்பாங், கோலா லங்காட் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை நள்ளிரவு வரை வெள்ள அபாயம் நீடிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், பேராவில் வெள்ள நிலைமை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஏழு நிவாரண மையங்களில் 241 குடும்பங்களைச் சேர்ந்த 701 பேர் தங்கியுள்ளனர். இருப்பினும், சுங்கை குராவ் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் அப்பகுதியில் எச்சரிக்கை நீடிக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →