Nov 18, 2026
Thisaigal NewsYouTube

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

நாடாளுமன்றத்தில் கவிதை வடிவிலான பந்துன் பாடலில் சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக, பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் மஸ்லான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மக்களவைக் கூட்டத்தின்போது டோல் சாவடிக் கட்டணக் குறைப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அஹ்மாட் மஸ்லான், 'கென்சிங்’ என்ற மலாய் வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். இது ஏமாற்றப்படுவதைக் குறிக்கும் மலாய் சொல்லாடலாகும்.

இதையடுத்து, நவம்பர் 17ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் நாடாளுமன்றத்தில் தனது சொல்லாடல் தேர்வு பொருத்தமற்றது என்பதை ஒப்புக் கொண்ட அஹ்மாட் மஸ்லான், அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்றதுடன், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றுமை அரசாங்கத்துடனும் பிரதமர் அன்வாரின் தலைமையுடனும் தமக்குள்ள ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும், அரசாங்கப் பிரதிநிதியாகத் தனது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு

மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு