Nov 18, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

காவல்துறையின் 219ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, கெடா மாநிலக் காவல்துறை மற்றும் கெடா ஊடகவியலாளர் கழகம் இணைந்து நடத்திய சமூகக் காவல் உறவுத் திட்டத்தில் 30 ஊடகவியலாளர்கள் பங்கேற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை கூபாங் பாசு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கெடா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகள், துப்பாக்கிகளைக் கையாளும் முறை மற்றும் இலக்கை நோக்கிச் சுடும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், காவல்துறையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே 'Falling Plate' எனும் சிறப்புப் போட்டியும் நடைபெற்றது.

காவல்துறைக்கும் ஊடகத்துறைக்கும் இடையிலான நல்லுறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியின் நிறைவில் உறுதிமொழி ஏற்பு, தலைவர்களின் உரைகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →