Nov 18, 2026
Thisaigal NewsYouTube

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவருக்கும் அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றம் தலா 80 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கியுள்ளது.

59 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களது 31 வயது மகன் ஆகியோர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007இன் பிரிவு 12இன் கீழ் மொத்தம் 16 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

நீதிபதி ஷார்மிலா அப்துல் சமாட் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வழக்கு மீண்டும் டிசம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி அலோர் ஸ்டாரில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ஓப் பிந்து நடவடிக்கையில், மனிதக் கடத்தலுக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 16 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அப்போது 33 இந்தோனேசிய கடப்பிதழ்கள் மற்றும் 122 ஆயிரத்து 598 ரிங்கிட் ரொக்கமும் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு

மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு