Nov 18, 2026
Thisaigal NewsYouTube

மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மானியமில்லா எரிபொருள் விலைகள் மீண்டும் சரிவு

மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விலைப் பட்டியலின்படி, மானியமில்லா ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 15 சென் குறைந்து, முறையே 3 ரிங்கிட் 72 சென் மற்றும் 4 ரிங்கிட் 72 சென்னாக விற்பனை செய்யப்படும்.

அதேவேளையில், ரோன்97 பெட்ரோல் விலை 20 சென் குறைந்து, லிட்டருக்கு 4 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புடி95 திட்டத்தின் கீழ் ரோன்95 பெட்ரோல் விலை 1 ரிங்கிட் 99 சென்னாகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் விலை 2 ரிங்கிட் 10 சென்னாகவும் தொடர்ந்து நீடிக்கும்.

மேலும், எஸ்கேபிஎஸ் (SKPS) மற்றும் எஸ்கேடிஎஸ் (SKDS) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானிய எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றமில்லை. இந்த விலைகள் வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →