Nov 18, 2026
Thisaigal NewsYouTube

செலாயாங்கில் மரம் முறிந்து விழுந்து விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செலாயாங்கில் மரம் முறிந்து விழுந்து விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி உடல் நசுங்கி உயிரிழப்பு

செலாயாங், செத்தியா எகோ தெம்ப்ளர் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில், அதன் அடியில் சிக்கிக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று பிற்பகலில் கடும் மழைக்கு மத்தியில் நிகழ்ந்தது. இது தொடர்பாகப் பிற்பகல் 2.19 மணிக்குத் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறு தீயணைப்பு வீரர்கள், மரத்தின் அடியில் சுயநினைவின்றிக் கிடந்த ஆடவரை மீட்டு, பிற்பகல் 2.35 மணிக்கு வெளியே கொண்டு வந்தனர்.

முறிந்து விழுந்த மரம், அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன், அவ்வழியாகச் சென்ற லாரி ஒன்றின் மீதும் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு அதிகாரிகள் அந்த ஆடவரின் மரணத்தை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், மரத்தை அகற்றும் பணிகள் நிறைவடைந்ததாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →