Nov 18, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் லாசிம் வெள்ளிக்கிழமை சுல்தானைச் சந்திக்கிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் லாசிம் வெள்ளிக்கிழமை சுல்தானைச் சந்திக்கிறார்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம், வரும் வெள்ளிக்கிழமை மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைச் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நிலை மற்றும் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சிரம்பானில் இஸ்தானா ஹிங்காப் அரண்மனையில் இருவரும் சந்தித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் மீண்டும் பதவியில் தக்கவைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தங்களது நியமன ரத்து தொடர்பாக முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மொத்தம் 48 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவைச் செலுத்துமாறு சிரம்பான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →