Nov 18, 2026
Thisaigal NewsYouTube

பேராக் சட்டமன்றம் கலைக்கப்பட்டதா? – மந்திரி பெசார் அலுவலகம் மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் சட்டமன்றம் கலைக்கப்பட்டதா? – மந்திரி பெசார் அலுவலகம் மறுப்பு

பேராக் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மந்திரி பெசார் அலுவலகம் மறுத்துள்ளது.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி முஹமட், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க அனுமதி கோரியதாகவும், அதற்கு சுல்தான் ஒப்புதல் வழங்கியதாகவும் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்பைப் போன்ற போலியான படங்கள் மற்றும் பழைய செய்திக் காணொளிகள் மீண்டும் பகிரப்படுவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வத் தகவல் மூலங்களை மட்டுமே நாடுவதுடன், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →