Nov 19, 2026
Thisaigal NewsYouTube

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ள லெபோ பந்தாய் எனப்படும் பீச் ஸ்டிரிட், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் 28 சிறந்த வீதிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து அனைத்துலக அங்கீகாரம் பெற்றுள்ளது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுலா ஊடக நிறுவனமான டைம் அவுட் வெளியிட்டுள்ள இப்பட்டியலில், இவ்வீதி அதன் வளர்ந்து வரும் படைப்பாற்றல் மிக்க சூழல், சுயேட்சை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1786 முதல் 1787ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இவ்வீதி, இளம் உள்ளூர் தொழில்முனைவோரின் முயற்சியால் புதிய கஃபேக்கள், உணவகங்கள், பழங்காலப் பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் நவீன வர்த்தகத் தளங்களுடன் புத்துயிர் பெற்றுள்ளதாக டைம் அவுட் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சோங் வாட் ரோட் இப்பட்டியலில் முதலிடத்தையும், லண்டனின் கோல்பெர்ன் ரோட் (Golborne Road) இரண்டாவது இடத்தையும், அர்ஜென்டினாவின் Fernández de Enciso மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →