Nov 19, 2026
Thisaigal NewsYouTube

2 லட்சத்து 25 ஆயிரம் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாண 111 ஆண்டுகள் தேவைப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2 லட்சத்து 25 ஆயிரம் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாண 111 ஆண்டுகள் தேவைப்படும்

நாட்டில் தங்கியுள்ள 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகளை மூன்றாவது நாடுகளுக்கு அனுப்பும் தற்போதைய வேகம் தொடர்ந்தால், அவர்களின் மறுகுடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வுகாண 111 ஆண்டுகள் வரை தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி மொஹமட் ஜிடின் கூறுகையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வெறும் 974 அகதிகள் மட்டுமே மூன்றாவது நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுப்பப்பட்டால், அனைத்து அகதிகளையும் மறுகுடியேற்றம் செய்ய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகும் என்றார்.

ஐ.நா. அகதிகளுக்கான தூதரகம், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை ஏற்று, மறுகுடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசியான் அமைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் அனைத்துலகத் தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி, அகதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது குறித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →