Nov 19, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 28 ஆயிரத்து 755 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்களைக் கண்டறிய ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இணைந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் செலவில் ஆய்வு நடத்தவுள்ளன.

இதற்காக இரு தரப்பும் தலா 1 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கும் என ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் மூலம், எதிர்காலத்தில் உருவாகும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப ஜோகூர் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க உள்ளூர் பயிற்சி நிறுவனங்களுக்கு உதவ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர்-சிங்கப்பூர் கூட்டு அமைச்சரவைக் குழுவின் முதல் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் வேலை தேடும் இளைஞர்களின் திறன்களுக்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சித் திட்டங்களை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →