Nov 19, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி வழங்குவது தொடர்பான முன்மொழிவு, மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் பரிசீலனைக்குக் கொண்டு செல்லப்படும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களில் பதிவு செய்திருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிதியுதவி வழங்காமல், பேரிடரால் ஏற்பட்ட உண்மையான சேதங்களைச் சரிபார்த்து உதவி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த முடியுமா? என தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் இசாம் முஹமட் இசா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஸாஹிட் ஹாமிடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் போதே அவர்களுக்கு ஆறுதல் நிதியுதவியான பந்துவான் வாங் இஹ்சான் வழங்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நிவாரண மையங்களுக்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கும் உதவி வழங்கப்படும் என்றும், ஆனால், அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எனப் பதிவு மையத்தில் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதையும் ஸாஹிட் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்