Nov 19, 2026
Thisaigal NewsYouTube

மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சையா? – விசாரணை கோரும் மருத்துவச் சங்கம்

சபா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் தடைபட்டதால், மருத்துவர் ஒருவர் செல்போனின் மின்விளக்கு வெளிச்சத்தைப் பயன்படுத்தி நோயாளிக்குத் தையல் போட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய மருத்துவச் சங்கமான எம்எம்எ (MMA) வலியுறுத்தியுள்ளது.

இந்தப் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்றும், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவமனைகளின் அத்தியாவசியக் கட்டமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் எம்எம்எ தலைவர் டாக்டர் எல். சிவநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனைகளில் குளிரூட்டும் சாதனங்கள் அடிக்கடி பழுதடைவது, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படுவது, அவசரகால மின்சாரக் காப்பு அமைப்புகள் செயலிழப்பது போன்ற பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் எந்தவொரு நோயாளியும் அறுவைச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும், அத்தியாவசிய மருத்துவ வசதிகள் செயலிழப்பதால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கான சிகிச்சையின் தரத்தில் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகக் கூடாது என்றும் எல். சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

ஜோகூர், சிங்கப்பூர் இணைந்து உருவாக்கும் வேலைவாய்ப்புத் திட்டம்: 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கும் நிதியுதவி: அரசாங்கம் பரிசீலனை

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

சுங்கை சிப்புட்டில் மீண்டும் புலி தாக்குதல்: மூங்கில் சேகரிக்கச் சென்ற ஆடவர் பலி

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பேராக் உலு கிந்தாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

கோலா கங்சார் பள்ளியில் 3ஆம் படிவ மாணவர் மர்ம மரணம் - விரிவான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்

"அவசரகால எச்சரிக்கை சோதனை பொதுமக்களுக்கானது அல்ல" - எம்சிஎம்சி விளக்கம்