ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இரண்டரை மாதச் சம்பளத்திற்குச் சமமான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவித்துள்ளார்.
இந்த ஊக்கத்தொகை மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, ஜோகூர் அரசின் ஊதியப் பட்டியலில் உள்ள கூட்டரசு அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இத்தொகை டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜோகூரில் பணியாற்றும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 648 கூட்டரசு அரசு ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்காக 7 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பந்துவான் காசே ஜோகூர் திட்டத்தின் கீழ் 200 ஊடகப் பணியாளர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதங்களில் இரு கட்டங்களாக வழங்கப்படும்.








