Nov 19, 2026
Thisaigal NewsYouTube

பெந்தோங், காராக் பகுதிகளில் திடீர் வெள்ளம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெந்தோங், காராக் பகுதிகளில் திடீர் வெள்ளம்

பகாங் பெந்தோங் மற்றும் காராக் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

தாமான் பெர்மாய், காராக் அவேனியூ மற்றும் பெலாங்காய், ஜாலான் செமோமோய் ஆகிய பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தகவல் வெளியிட்ட பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் ஷேஃபுரா ஒத்மான், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதுவரை வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்படவில்லை. பொதுமக்களும் வெளியேற்றப்படவில்லை.

இதற்கிடையே, ஜாலான் மஞ்சிஸ்-தெலெமோங் பகுதியில் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →